ஏ.சி.சண்முகம் எஸ்கேப்: ஜாமீன் கேட்கிறார்
சென்னை:
கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கல்லூரிகளைக் கட்டி சிக்கலில் மாட்டியுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக்கழகவேந்தரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் தனது மனைவி கலாவதி, பல்கலைக்கழக டீன் பவானி சங்கர்ஆகியோருடன் தலைமறைவாகிவிட்டார்.
சென்னை மதுரவாயல் பகுதியில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து தனது பல்கலைக்கழகத்துக்கு கட்டங்களைக் கட்டியுள்ளார்சண்முகம். தனது திருட்டுத்தனத்தை மறைக்க கல்விக்கூடத்துக்கு அவர் வைத்த பெயர் எம்ஜிஆர் பல்கலை என்பது.இந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நேற்று முதல் இடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று இரண்டாவது நாளாக இடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந் நிலையில் ஏ.சி.சண்முகம், கலாவதி, பவானி சங்கர்ஆகியோர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு நிலத்தை ஆக்கிரமித்தது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவ,மாணவியரை காக்க நடவடிக்கை எடுக்காதது என மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் கீழ் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர் பாரி தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படை, இந்த மூவரையும் தேடி வருகிறது.
ஆனால், ஏ.சி. சண்முகம், எஸ்கேப் சண்முகம் ஆகிவிட்டார். இப்போது தலைமறைவாகிவிட்டார். கூடவே அவரது மனைவி, டீன்ஆகியோரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இவர்களைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடையக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
முன் ஜாமீன் கோரும் ஏ.சி.எஸ்
இந் நிலையில் தங்களுக்கு எதிராக போலீஸார் தாக்கல் செய்துள்ள 3 வழக்குகளிலும் முன் ஜாமீன் வழங்கக் கோரி ஏ.சி.சண்முகம்,அவரது மனைவி கலாவதி, டீன் பவானிசங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications