ஜெயேந்திரர் மீது திருட்டு வழக்கு: பழி வாங்க முயற்சி?-முன் ஜாமீன் கோருகிறார்
திருவாரூர்:
கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த நவரத்தின கற்களை ஜெயேந்திரர் திருடிச் சென்றுவிட்டதாக அவர் மீது திருவாரூர் மாவட்டம் கோட்டூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அஞ்சும் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளார்.தன்னை அதிமுக அரசு போலீஸ் உதவியுடன் பழிவாங்க முயல்வதாக ஜெயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வருபவர் சுரேஷ் என்கிற கிருஷ்ணன். இவரது சொந்த ஊர் கோட்டூர் அருகே உள்ளபெரியகுடி. இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், பெரியகுடி கிராமத்தில் செளந்தரநாயகி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மூலவர்சிவலிங்கத்திற்கும், இன்னொரு சிவலிங்கத்திற்கும் கீழே தங்கம், வைரம், கோமேதகம், மரகத கற்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதன் விலை அப்போதே ரூ.2 லட்சம் என்று கூறப்பட்டது. இந்தக் கோவிலில் கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.கோவில் திருப்பணியின் போது இந்தக் கற்கள் சிலைகளுக்குக் கீழே வைக்கப்பட்டன.
அப்போது நானும் அந்த இடத்தில் இருந்தேன். கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதியன்றும்,2000மாவது ஆண்டு ஜூன் 14ம் தேதியன்றும் ஜெயேந்திரர் இக்கோவிலுக்கு வந்தார்.
அந்த சமயத்தில் நடந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர் கலந்து கொண்டார். சமீபத்தில் கடந்த நவம்பர்11ம் தேதி ஜெயேந்திரர் இக்கோவிலுக்கு மீண்டும் வந்தார்.
அப்போது சிவலிங்கத்தின் அடியில் இருந்த கற்களை ஜெயேந்திரர் வெளியே எடுத்தார். எதற்காக கற்களை எடுக்கிறீர்கள் என்றுநான் கேட்ட போது, அதற்கு மருந்து சாத்த வேண்டும்.சாத்திய பின் திரும்பவும் உள்ளே வைத்துவிடலாம் என்று கூறி அதைதன்னுடன் எடுத்துச் சென்றார்.
ஆனால் எடுத்துச் சென்ற கற்களை இதுவரை கொண்டு வந்து வைக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார் சுரேஷ். இந்தப் புகார் குறித்து கோட்டூர் போலீஸார், மாவட்ட காவல்துறை ஆணையர் பாஸ்கரனுக்குத் தகவல்கொடுத்தனர்.
உடனடியாக பாஸ்கரன், டிஎஸ்பி கல்யாண ராமன் உள்ளிட்ட போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று சிவலிங்கசிலைகளைப் பார்வையிட்டனர். சுரேஷின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூரைச் சேர்ந்த 8 பேரிடமும் விசாரணைநடத்தியுள்ளனர். ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக டிஜிபியின் அனுமதியை அவர்கள் கோரியுள்ளதாகதெரிகிறது.
இந்த வழக்கில் ஜெயேந்திரரை உள்ளே தள்ள அதிமுக அரசு முயல்வதாகக் தெரிகிறது.
பழி வாங்குகிறது அதிமுக அரசு:
இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நான் பெரியகுடி கோவிலுக்கு சென்றது உண்மைதான். ஆனால் நவரத்தின கற்கள் எதையும் நான் எடுத்துச்செல்லவில்லை. அப்பட்டமான பொய் புகார் அது.
என்னைப் பழிவாங்க தமிழக அரசு துடிக்கிறது. இதன் காரணாகவே சங்கரராமன் கொலை வழக்கில் என்னை சேர்த்துள்ளனர்.இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்ற தலையீட்டின் பேரில் தமிழகத்திலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதைப் பொறுக்க முடியாத தமிழக அரசு, பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது தற்போது யாரையோ விட்டு பொய்யான புகாரைக்கொடுக்க வைத்துள்ளது. இந்த புகாரின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என அஞ்சுகிறேன்.
எனவே இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டால் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.ஜாமீனில் வெளியில் விடப்பட்டால் நான் ஓடிப் போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதே போல இந்த வழக்கில் ஜெயேந்திரருடன் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 7 பேரும் தனித்தனியாக முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications