சித்திரவதை: நஷ்டஈடு கோரி முத்துலட்சுமி வழக்கு
சென்னை:
தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப் படையினரால் சித்திரவதைக்கு ஆளான மலைவாழ் மக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடுவழங்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முத்துலட்சுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், வீரப்பன் வேட்டை என்ற பெயரில், தமிழக மற்றும் கர்நிாடகஅதிரடிப்படையினர் சத்தியமங்கலம், பண்ணாரி உள்ளிட்ட மலை கிராமங்களில் பல பேரைக் கைது செய்து சித்திரவதைசெய்தனர்.அவர்களை அடித்து, உதைத்தும், கொடுமைப்படுத்தியும், கைது செய்து சிறையில் அடைத்தும் மலை வாழ் மக்களை வாட்டிவதைத்தனர்.
அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட அப்பாவி மலை வாழ் மக்கள் தமிழக மற்றும் கர்நாடக சிறைகளில் இன்னும் கூடஅடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 28 பேரும், கர்நாடகத்தில் 38 பேரும் சித்திரவதைக்கு ஆளாகி இன்னும் சிறையில்உள்ளனர்.
மலை வாழ் மக்கள் சித்திரவதைக்குள்ளானதை இரு மாநில அரசுகளும் நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணையின்போது ஒத்துக்கொண்டுள்ளன. இவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று சதாசிவம் கமிஷன் உத்தரவிட்டும் கூட இன்னும்அது வழங்கப்படவில்லை.
எனவே பாதிப்புக்குள்ளான மலை வாழ் மக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட வேண்டும். இடைக்கால நிவாரணமாக ரூ. 2லட்சம் வழங்க இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அதில் முத்துலட்சுமி கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications