ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.16 கோடி போதை பொருள்: 3 பேர் கைது
சென்னை:
சென்னைக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.16 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரைகைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியிலிருந்து சென்னை வந்த அகிலங்கிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள்கள் கடத்திவருவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் படி சென்னை சென்டிரல் வந்த அந்த ரயிலில் பலத்த சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கலர்களில்33 பொட்டலங்களில் 16 கிலோ மற்றும் 817 கிராம் ஹெராயின் போதைப் பவுடர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றின் மதிப்பு ரூ.16 கோடி ஆகும்.
இந்த போதைப் பவுடரை கடத்தி வந்ததாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஜி. ஜெயந்தி என்கிற லட்சுமி மற்றும் அவரது மகன்ஜெகன் என்கிற ரவி ஆகிய 2 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த கடத்தலின் தலைவனாக செயல்பட்ட மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சிவபாலன் என்கிற பாலன்என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த ஹெராயின் போதைப்பவுடரை இலங்கைக்கு கடல்வழியாக கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று கைது செய்யப்பட்ட 3 பேரிடமும்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications