நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பிரதமர் அமைச்சர்கள், எம்பிகள் அவசரமாக வெளியேற்றம்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவுக்கு அமெரிக்கத் தூதரகம் தகவல்தந்ததையடுத்து இன்று காலை லோக் சபாவும் ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டு பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்படஅனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இரு அவைகளிலும் மோப்ப நாய்ப் படைகளும், கமாண்டோக்களும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், இது வெறும் புரளிஎன்பது உறுதியானதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் இரு அவைகளும் கூடின.
இன்று காலை இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள்லோக்சபா செயலாளர் ஆச்சாரியிடம் ஓடி வந்து வளாகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான பைரோன்சிங்செகாவத், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி ஆகியோரைத் தொடர்பு கொண்டு தகவல் தந்தார்.
இகையடுத்து 11.45 மணியளவில் அபாய எச்சரிக்கைக்கான சைரன் ஒலியும் எழுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து லோக்சபாவை ஒத்தி வைத்த சபாநாயகர் எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரை உடனடியாகவெளியேறுமாறு உத்தரவிட்டார்.
அதே போல ராஜ்யசபாவை ஒத்திவைத்த பைரோன் சிங் செகாவத், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை அங்கிருந்துவெளியேறுமாறு உத்தரவிட்டார்.
நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து முடித்த அடுத்த சிலநிமிடங்களில் இந்த சைரன் ஒலித்தது. இதையடுத்து பிரதமர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள செளத் பிளாக்குக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே போல பிறஅமைச்சர்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எம்பிக்கள் அனைவரும் அவைகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். பெரும்பாலானவர்கள் நாடாளுமன்றவளாகத்தில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் நாடாளுமன்றத்தை அங்குலம் அங்குலமாக கமாண்டோக்கள்சோதனையிட்டனர்.
நாடாளுமன்றத்தைச் சுற்றி பாராமிலிட்டரிப் படைகளும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இருந்துபத்திரிக்கையாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதியமைச்சகம் ஆகியவை அமைந்துள்ள செளத் பிளாக், நார்த் பிளாக் ஆகியகட்டடங்களைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்துக்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததாக உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் உங்களுக்குத் தந்ததா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்தார்.
ஆனால், அவையில் இருந்து அவசரமாக வெளியேறிய பாஜக மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,நாடாளுமன்றத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் மத்திய உளவுப் பிரிவான ஐபிக்குத் தகவல்தந்துள்ளது என்று அமைச்சர்ள் தெரிவித்தனர் என்றார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பாதகவும் பதற்றமடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்ரேணுகா செளத்ரி தெரிவித்தார்.
வெடிகுண்டு குறித்து நீங்கள் தான் தகவல் தந்தீர்களா என டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கேட்டபோது,பாதுகாப்பு விஷயங்கள் குறித்து நாங்கள் ஏதும் பேசுவதில்லை. அதை நீங்கள் இந்திய அரசிடம் தான் கேட்டுக் கொள்ளவேண்டும் என அதன் செய்தித் தொடர்பாளர் டேவிட் கென்னடி கூறினார்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நிருபர்களிடம் பேசுகையில், யாரும் பதற்றமடையத் தேவையில்லை. முழுமையானஅளவில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது என்றார்.
லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், நாடாளுமன்ற வளாகத்தில் சோதனைகள் முடிந்து 3 மணிக்கு அவைகூடும் என்றார்.
அதே போல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியும் உறுப்பினர்கள் அனைவரும் 3 மணிக்குஅவைக்குத் திரும்பலாம் என்றார்.
இதற்கிடையே முதல் சுற்று சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு முறைசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் ராணுவ நிபுணர் படைகளும், தேசிய பாதுகாப்புப் படைகமாண்டோக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இரண்டு முறை நாடாளுமன்ற வளாகத்தை முழுமையாக சோதனையிட்ட பின்னரும் வெடிகுண்டு ஏதும்கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து 3 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது பேசிய சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்றத்தின்பாதுகாப்பு வளையங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன. வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது வெறும் புரளி தான்.
இது போன்ற மிரட்டல்களால் இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தையும் யாராலும் சீர்குலைத்துவிட முடியாது என்றார்.
2001ம் ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications