சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு வந்த மெயில்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு இ-மெயில் மூலம்தகவல் வந்ததாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.

குண்டு மிரட்டலையடுத்து ஒத்தி வைக்கப்பட்ட லோக்சபா மீண்டும் கூடியதும் பாட்டீல் கூறியதாவது:

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு இன்று காலை ஒரு இ-மெயில் வந்தது. அதில், நாடாளுமன்றக் கட்டடம்மற்றும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை அனைத்தும்இன்று பகல் 11.46 மணிக்கு வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிந்தால் இந்த குண்டு வெடிப்பைத் தடுத்துப் பாருங்கள். அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும். வாழ்க ஒசாமா பின் லேடன் என்று கூறப்பட்டிருந்தது.

சிபி தளத்தின்(SIFY) மெயிலில் இருந்து அந்த மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மெயிலின் காப்பி எனக்கும், சபாநாயகர்சோம்நாத் சாட்டர்ஜிக்கும், துணை ஜனாதிபதி ஷெகாவத்துக்கும் அனுப்பட்டுள்ளது. ஆனால், அந்த மெயில்கள் எங்களுக்குவரவில்லை.

இந்த மெயில் கிடைத்தவுடன் அமெரிக்கத் தூதரகம் சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தந்தது. அதே வேளையில்டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மத்திய உளவுத்துறைக்கு தகவல் தந்தது.

இந் நிலையில் சென்னை மாநகர போலீசாரும் டெல்லி போலீசாரையும் ஐபியையும் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தனர்.மேலும் தமிழக உள்துறைக்கு மத்திய உள்துறைக்கும் தகவல் தந்தது.

இதையடுத்து நாடாளுமன்றம் இரண்டு முறை முழுமையாக சோதனையிடப்பட்டுவிட்டது. ஆனால், குண்டு ஏதும்கண்டுபிடிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. இதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் ஏதும்.இருந்தாலும் நாங்கள் எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விஷயம் குறித்து முழு அளவில் விசாரணை நடக்கும்என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் சென்னையில் இருந்து இந்த வெடிகுண்டுமிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+