தமிழகத்தை நெருங்கும் புதிய புயல்: இப்போது 650கிமீ தொலைவில்
சென்னை:
![]() |
இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் நாளை முதல் தமிழகம், பாண்டிச்சேரியில் மீண்டும் கன மழை பெய்யும் எனவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தென் கிழக்கு வங்ககடலில் அடுத்தடுத்து 5புயல் சின்னங்கள் உருவாகிவிட்டன. இதனால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து பலத்த சேதத்தைஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழக மக்களை அச்சுறுத்தும் வகையில் வங்க கடலில் மீண்டும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது:
இப்போது தென் கிழக்கு வங்ககடலில் நாகப்பட்டினத்தில் இருந்து 650 கிமீ காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. இது மேலும்வலுவடைந்து வருகிறது. தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் இந்த மண்டலத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் அல்லது நாளை காலை முதல் மழை பெய்யும்.
நாளை (சனிக்கிழமை) முதல் கடலோரப் பகுதிகளில் 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக கடல்கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி நகர்ந்து செல்லவும் வாய்ப்புள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications