ரூ. 200 கோடி நில ஊழல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையை அடுத்த சிறுசேரியில், அரசுக்குச் சொந்தமான 103 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ. 15 கோடிக்கு சிங்கப்பூர் ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்றது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறுசேரியில் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 103 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ. 15 கோடிக்கு விற்றது. ஆனால், இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 200 கோடியாகும்.

இந்த நில ஊழலில் ரூ. 70 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ளஇந்த நிலம் வெறும் ரூ. 15 லட்சம் என்ற மதிப்பில் ரூ. 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த நில விற்பனையை எதிர்த்து முக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், இந்த நில விற்பனை விதிமுறைகளுக்கு முரண்பாடாக நடந்துள்ளது. இந்த மோசடி விற்பனையால் அரசுக்கு ரூ. 190.55கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும்,

இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்னர். மேலும் விசாரணையை வரும் 23ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+