ரயில் பாதையில் தொங்கும் பாறைகள்
சின்னாளபட்டி:
![]() |
தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை மற்றும் வட மாநில நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் அம்பாத்துறை-கொடைரோடுரயில் நிலையங்களை கடந்து தான் செல்ல வேண்டும். சமீபத்தில் பெய்த கன மழையால் இங்கு பெரிய பாறைகள் தண்டவாளத்தில்உருண்டு விழுந்து, சென்னை உள்பட பல நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து 3 நாட்களுக்கு துண்டிக்கப்பட்டது.சிலதினங்களுக்கு முன் கூட மண் சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்னும் அந்த ரயில் பாதையில் ஆபத்து தீர்ந்தபாடில்லை. பல இடங்களில் பாறைகள் அபாயகரமாக சரியும் நிலையில் உள்ளன.எப்போது வேண்டுமானாலும், இந்தப் பாறைகள் உருண்டு விழலாம். இங்கு மண்சரிவு காரணமாக பாறைகள் வலுவிழந்துஅந்தரத்தில் ஊசலாடுகின்றன. அடுத்து ஒரு சிறு மழை பெய்தால் கூட பாறைகள் உருண்டு ரயில் பாதையில் விழுந்து விடும்நிலையில் உள்ளது.
மேலும் கன்னியாகுமரி, மதுரை போன்ற தென்மாவட்டப் பகுதிகளில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்றமுக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இந்த மலைக்குகைப் பாதை வழியாகத்தான் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட உதவி மேலாளர் சுயம்புலிங்கம் கூறுகையில், அபாயகரமாகத் தொங்கிகொண்டிருக்கும் பாறைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
முதற் கட்டமாக பாறைகளை அகற்ற ரூ. 60 லட்டசத்துக்கு டெண்டர் விட்டிருக்கிறோம். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணிகள் நடைபெற உள்ளன என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!













Click it and Unblock the Notifications