விஜயகாந்த்தை மிரட்ட முடியாது: பண்ருட்டி
சென்னை:
வருமான வரிச் சோதனை, கல்யாண மண்டபத்தை இடித்து விடுவோம் என்று கூறி மிரட்டி, விஜயகாந்த்தின் அரசியல்நடவடிக்கைகளை முடக்கி விட முடியாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி:
விஜயகாந்த்தின் அரசியல் எழுச்சியைப் பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக கிளம்பியுள்ளனர். திமுகவுக்கு எதிராக அவர்செயல்படுகிறார் என்பதால் வருமான வரி சோதனை வரும் என்று சிலர் மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் விஜயகாந்த் அஞ்சமாட்டார்.
எல்லாம் நான் சுயமாக சம்பாதித்தது. அவற்றை மக்களுக்காக இழக்க தயாராக இருக்கிறேன் என்று ஏற்கனவே மக்களிடம்விஜயகாந்த் கூறியுள்ளார். சொத்து எனக்குப் பிரச்சினை இல்லை, தேவையும் இல்லை. மக்கள் என் பக்கம்தான் என்று அவர் கூறிவருகிறார். எனவே வருமான வரி சோதனை வரும் என்று கூறி விஜயகாந்த்தை மிரட்ட முடியாது.
அதேபோல மக்கள் நலனுக்காக என்று கூறி விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தை இடிப்பதையெல்லாம் குறித்துஅவர் கவலைப்படவில்லை. கல்யாண மண்டபத்தை காக்கத்தான் மத்திய அரசை அவர் எதிர்க்கிறார் என்று கூறுவது தவறு.
தமிழக மழை, நிவாரணத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதொடர்பாக தமிழகம் மற்றும்புதுவையைச் சேர்ந்த எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று விஜயகாந்த் கேட்டதில் என்ன தவறு?
மக்கள் நிலனுக்காகத்தானே அவர் அவ்வாறு கேட்டார். இதற்காக கல்யாண மண்டபத்தை இடிப்போம் என்றால் மக்கள் அதைவேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தனது மாநில மக்களின் துயர் துடைக்க நிதி வழங்குங்கள் என்று மத்திய அரசிடம், ஒரு அரசியல்வாதி கேட்பதில் என்ன தவறுஇருக்க முடியும். அந்த வகையில் தனது கடமையைத்தான் விஜயகாந்த் செய்துள்ளார்.
இதன் காரணமாக விஜயகாந்த்தை மிரட்டி பணிய வைக்க முடியும் என்று நினைத்தால் அது நடக்காது என்றார் பண்ருட்டியார்.












Click it and Unblock the Notifications