நாகையை நெருங்கும் புயல்
சென்னை:
![]() |
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் வேகமாக நகர்ந்து வருகிறது. இப்போது அது வலுவடைந்துள்ளதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் சின்னம் தற்போது நாகைக்கு மேற்கு வட மேற்கு திசையில்550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து அதே திசையில் புயல் சின்னம் நகர்ந்து வருவதாகவும்வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று இரவு முதல் கடலோர தமிழகத்திலும், புதுவையிலும் கன மழை பெய்யும் என்றும் மணிக்கு 60கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல்சின்னம் மேலும் நெருங்கி வரும் போது தான் அது எங்கு கரையைக் கடக்கும் என்பதைக் கணிக்க முடியும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து நாகை கடற்கரையில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.
ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை கொடி:இந் நிலையில் ராமேஸ்வரம் கடற்கரையில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதோடு கரையோரமீனவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இரவிலும் வெள்ளை விளக்குகள் எரியவிடப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.
மேலும் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தில் இன்று மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. மீனவர்கள்யாரும் கடலுக்குள் செல்லவில்லை. நேற்று மாலை ராமேஸ்வரம் கடல் பகுதியில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications