தாயார் மரணம்: வருவாரா கராத்தே?
சென்னை:
தலைமறைவாக இருக்கும் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் தாயார் அவரது சொந்த ஊரில்மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சியில் கராத்தே கலந்து கொள்ளக் கூடும் என்பதால் சொந்த ஊரானதிருத்துறைப்பூண்டியில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகள் வைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில்கராத்தே தியாகராஜனை போலீஸார் கைது செய்யத் திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.டெல்லியில் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரின் பாதுகாப்பில் அவர் இருப்பதாக முன்பு கூறப்பட்டது. அவரைப் பிடிக்கசென்னை போலீஸார் டெல்லியில் முகாமிட்டுத் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் நேபாளம் தப்பி விட்டதாக கூறப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கராத்தே தியாகராஜனின்தாயார் பாலச்சந்திரா திருத்துறைப்பூண்டியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65. தஞ்சாவூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ்உறுப்பினராக இருந்தவர்.
தாயார் மறைந்தது குறித்த தகவல் கராத்தேவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கராத்தேவின் குடும்பத்தினரும்,உறவினர்களும் திருத்துறைப்பூண்டிக்கு விரைந்துள்ளனர்.பாலச்சந்திராவின் இறுதிச் சடங்குகள் நாளை நடக்கவுள்ளது.
இதனால் தாயாரின் இறுதி நிகழ்ச்சிகளில் கராத்தே கலந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது. அவர் மாறுவேடத்தில் வருவாராஅல்லது நேரடியாக கலந்து கொள்வாரா என்பது குறித்துத் தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து கராத்தே திருத்துறைப்பூண்டிக்கு வந்தால் அவரைக் கைது செய்ய போலீஸ் படை திருத்துறைப்பூண்டியில்மாறுவேடத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் போலீஸார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர திருச்சி விமானநிலையத்திலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications