பெங்களூர் பெண் என்ஜீனியர் கொலை: சென்னை போலீஸ் உஷார்
சென்னை:
பெங்களூரில் கால் சென்டரில் வேலை பார்த்து வந்த சாப்ட்வேர் என்ஜீனியர் பிரதீபா, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்டிரைவராலேயே கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கால்சென்டர்களில் வேலை பார்த்து வரும் ஓட்டுநர்கள் குறித்த விவரங்களை சென்னை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பிரதீபா. இவரை, அதே நிறுவனத்தில்ஓட்டுநராகப் பணியாற்றி வரும் சிவக்குமார் என்பவர், வேலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கடத்திச் சென்று கற்பழித்துக்கொலை செய்து விட்டார்.இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள கணிப்பொறி நிறுவனங்கள், கால்சென்டர்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெங்களூர் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள்இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கால் சென்டர்களில் பெண்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு உள்ளது என்பது குறித்துசென்னை மாநகர காவல் துறையும் ஆய்வு செய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்டவற்றில்பணியாற்றும் ஓட்டுநர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், முகவரிகள்,தொலைபேசி எண்கள், சென்னையில் உள்ள அவர்களது உறவினர்களின் முகவரிகள், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களைசேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இரவுப் பணியில் ஈடுபடும் பெண்கள் பாதுகாப்பான முறையில் அவர்களது வீடுகளுக்கு சென்றடைந்தது குறித்துசம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து கொள்ளுமாறும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு சென்னை காவல்துறைஅறிவுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications