சேலம் இன்டர்நெட் மையங்களில் சோதனை
சேலம்:
நாடாளுமன்றத்திற்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலின் எதிரொலியாக நெல்லையைத் தொடர்ந்து சேலம் நகரின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள இன்டர்நெட் மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இமெயில் அனுப்பப்பட்டநெல்லையைச் சேர்ந்த இரண்டு இன்டர்நெட் மையங்களை சீல் வைத்துள்ள போலீஸார் அந்த மையங்களின் உரிமையாளர்கள்,ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை அருகே சிவந்திப்பட்டி என்ற இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் தீவிரவிசாரணை நடத்துவதற்காக டெல்லி மற்றும் சென்னையிைலிருந்து 33 பேர் கொண்ட விசாரணைக் குழு நெல்லைவிரைந்துள்ளது.
இந்த நிலையில் சேலம் நகரிலும் இன்று இன்டர்நெட் மையங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். கம்ப்யூட்டர்தொழில்நுட்பம் குறித்து அறிந்த 100க்கும் மேற்பட்ட போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாலு ரோடு, ஐந்து ரோடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இன்டர்நெட் மையங்களில்இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனை குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன்தெரிவிக்கையில்,வெடிகுண்டு மிரட்டல் மட்டுமல்லாது பல வகைகளிலும் மிரட்டல் விடுத்து இமெயில்கள் அனுப்பப்படுகின்றன.
எனவே எல்லா வகையான மிரட்டல் மெயில்கள் குறித்தும் இந்த சோதனையின் போது ஆய்வு செய்யப்பட்டது. இந்தசோதனையின் போது, சாரதா கல்லூரி சாலையில் உள்ள ஒரு மையத்தில், ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்த இருஇளைஞர்கள் பிடிபட்டனர். அந்த மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications