ஜெயலலிதா அரசுக்கு கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வியாசர்பாடி சம்பவத்திற்குப் பிறகும் உஷார் நிலையில் காவல் துறையினர் இல்லாத காரணத்தால் தான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் 42 பேரின் உயிர்கள் பறி போனதற்குக் காரணம் என்று திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில், வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்கண்டனம் தெரிவித்துள்ளன. சென்னை அரசு பொது மருத்துவமனையில், காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி இன்று பார்த்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறுகையில், வியாசர்பாடி சம்பவத்தையடுத்து அரசு உஷார் நிலையில் இருந்திருந்தால் இந்த சம்பவத்தைத்தவிர்த்திருக்கலாம். அரசின் கவனக்குறைவு, அலட்சியப் போக்கு காரணத்தால் தான் 42 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையும் உஷார் நிலையில் இல்லை, அவர்களும் பணியில் கவனக்குறைவாக இருந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள்இனியும் நடைபெறாமல் இருக்க அனைத்துக் கட்சி குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். இந்த சம்பவத்திற்குப்பொறுப்பேற்று உடனடியாக ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதேபோல மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசில் புகார்செய்யவுள்ளேன். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் அவர்.

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் மருத்துவமனைக்கு வந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.பின்னர் தமிழக அரசைக் கண்டித்த அவர் உடனடியாக அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து நிவாரண உதவிகளை அரசுவழங்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+