உயிர் பலிகள்: நீதி விசாரணைக்கு ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வெள்ள நிவாரணம் பெறுவதற்காக நின்றிருந்த கூட்டத்தினரிடையே நெரிசல் ஏற்பட்டதில்42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 37 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா இன்றுஅரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் பேசுகையில், காலை 9மணிக்குத்தான் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியும் தெளிவாக அறிவித்திருந்தன.

இந்த நிலையில் எதற்காக அதிகாலையிலேயே அங்கு சென்று நெரிசலில் சிக்கினர்? என்று கேட்டார். அதற்கு காயமடைந்தவர்கள்,நாங்கள் அமைதியான முறையில்தான் நின்றிருந்தோம். அப்போது சிலர் வந்து, கதவைத் திறந்து விட்டார்கள், உடனே போனால்தான் உதவிகள் கிடைக்கும் என்று கூறினர்.

இதனால் தான் நாங்கள் முண்டியடித்துச் சென்றோம் என்றனர். பின்னர் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சைஅளிக்குமாறு மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், கடந்தமுறை வியாசர்பாடியில் நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்ததைத் தொடர்ந்து, உதவி வழங்கும் மையங்களின் எண்ணிக்கையைஅதிகரிக்க உத்தரவிட்டேன்.

மேலும் அந்த மையங்களில் அதிக அளவில் கவுண்டர்களைத் திறக்கும்படியும், ஒரு கவுண்டரில் 500 பேருக்கு மேல்அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தேன். இந்த உத்தரவுகள், அதிகாரிகளால் நேற்று வரை முறையாகவும்,சரியாகவும் அமல்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதப் பிரச்சினையும் இன்று அமைதியான முறையில் நிவாரணஉதவிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். இன்றும், நாளையும் கிண்டி-மாம்பலம் வட்டத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்டகுடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணிக்கு உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் பலமுறை அறிவித்திருந்தனர். இந்த நிலையில்சம்பந்தப்பட்ட மையத்திற்கு வெளியே இன்று அதிகாலையில் சுமார் 4500 பேர் கூடி விட்டனர். சம்பந்தப்பட்ட மையத்தில் 9கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கவுண்டரிலும் 500 பேர் வரை நிவாரண உதவி பெறுவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிலர் வந்து நுழைவாயில் திறந்து விடப்பட்டதாக கூறியுள்ளனர். அந்த நேரத்தில் கன மழையும் பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால் நின்றிருந்த பொதுமக்கள் காவல்துறையினரைத் தள்ளி விட்டு விட்டு முண்டியடித்து உள்ளேசென்றுள்ளனர்.

இதனால் சிலர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். அவர்களில் 42 பேர் இறந்து விட்டனர், 37 பேர் காயமடைந்தனர். எந்தெந்தபகுதிகளுக்கு எங்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெளிவாக அதிகாரிகள் அறிவித்திருந்தும் பொதுமக்கள் அதைப்பொருட்படுத்தாமல் அவசரப்பட்டு சென்றதால் தான் இந்த அசம்பாவிதச் சம்பவம் நடந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும். இறந்தவர்களின்குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 உதவியும் வழங்கப்படும்.

எனது அரசு மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் வெகுவாகப்பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் எனது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக சில விஷமிகள், அவதூறானசெய்திகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பியும், வதந்திகளைப் பரப்பியும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்தமுயலுகின்றனர்.

பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பாமல், பொறுமையாகவும், நிதானமாகவும் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்றுநிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+