எம்.எஸ். தபால்தலை: கருணாநிதி வெளியிடுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவு தபால் தலையை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில்திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.
மறைந்த இசையரசி, பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவாக மத்திய தொலைத்தொடர்புத் துறை தபால் தலையைஉருவாக்கியுள்ளது.இந்த தபால் தலை வெளியிடும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில்ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்தயாநிதி மாறன் தபால் தலையை வெளியிடுகிறார். முதல் தபால் தலையை கர்நாடக சங்கீதக் கலைஞர் டி.கே.பட்டம்மாள்பெற்றுக் கொள்கிறார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வாலி, கல்கி ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications