இ மெயில் மிரட்டல்: 10 பேரையும் டெல்லி கொண்டு செல்ல முடிவு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு இமெயில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் பிடியில் சிக்கியுள்ள 10 பேரையும்டெல்லிக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்த டெல்லியிலிருந்து வந்துள்ள தனிப்படை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றம் மற்றும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக கட்டிடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகஇமெயில் மூலம் மிரட்டிய கும்பல் குறித்து தமிழக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில் இமெயில், நெல்லையில் உள்ள இரண்டு இன்டர்நெட் மையங்களிலிருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு மையங்களையும் சோதனையிட்ட போலீஸார் அவற்றுக்கு சீல் வைத்தனர்.

பின்னர் மையங்களின் உரிமையாளர் இருவரைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர்கள் கொடுத்த தகவல்களின்அடிப்படையில் நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர், அவரது கல்லூரியில் பயிலும்மாணவர்கள் இருவர், அதே கல்லூரியின் ஊழியர்கள் உள்பட 10 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

இதில் அந்தப் பேராசிரியர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றி வருகிறார். அடிக்கடிபிராட்பேண்ட் இன்டர்நெட் மையத்திற்கு அவர் வந்து செல்வார் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது செல்போனிலிருந்து தான் இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் சென்றுள்ளதாகவும் போலீஸாரின்விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிராட்பேண்ட் இன்டர்நெட் மையத்தில் பணியாற்றி வரும் 4 பெண் ஊழியர்களின்உதவியுடன் கல்லூரிப் பேராசிரியர், அவரது கல்லூரியில் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்மாணவர்களைப் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு டி.எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினரின் விசாரணையில் இந்த தகவல்கள்தெரிய வந்துள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களின் சர்வர்களில் ஆய்வு நடத்தி பல்வேறு தகவல்களைஇந்தக் குழுவினர் சேகரித்துள்ளனர்.

மேலும், இன்டர்நெட் மையத்தின் உரிமையாளர் துணையில்லாமல், செல்போன் தகவலை இ மெயில் மூலம் அனுப்பியிருக்கமுடியாது என்பதால் பிராட்பேண்ட் இன்டர்நெட் மையத்தின் உரிமையாளர் செல்வின் முத்துராஜிடம் போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களிடம் சிவந்திப்பட்டியில் உள்ள ஆயுதப்படை காவல்துறை அலுவலகத்தில் வைத்து போலீஸார் துருவித் துருவிவிசாரித்தனர். இதில் போலீஸாருக்கு பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இமெயில் மிரட்டலை விடுத்தவர்களுக்கும், அல் உம்மா தீவிரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீஸாருக்குதகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கோவை குண்டுவெடிப்புத் தீவிரவாதிகளுக்கும், இ மெயில் மிரட்டல் விடுத்தவர்களுக்கும்தொடர்பு இருக்கக் கூடும் எனவும் தெரிகிறது.

தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள 10 பேரின் விவரம்:

ஷேக் ஜிந்தா, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறை விரிவுரையாளர்.

அப்பாஸ், ஞானியார் (அதே கல்லூரி மாணவர்கள்), பக்ருதீன், தப்பரை (கல்லூரி ஊழியர்கள்), அப்துல் அஜீஸ், செல்வின்முத்துராஜ் (பிராட்பேண்ட் இன்டர்நெட் மைய உரிமையாளர்), முத்துக்குமார் (பிராட்பேண்ட் இன்டர்நெட் மையநெட்வொர்க் என்ஜீனியர்), செல்வி (பெண் ஊழியர்), ராஜ்பாபு (நெல்லை ஆன்லைன் இன்டர்நெட் மைய உரிமையாளர்)ஆகியோர் தான் தற்போது போலீஸ் வளையத்தில் உள்ளனர்.

இதில் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு இமெயில் அனுப்பப்பட்ட நேரமான காலை 9.32 மணிக்கு, சம்பந்தப்பட்டபிராட்பேண்ட் இன்டர்நெட் மையத்தில் உட்கார்ந்து பிரவுசிங்கில் ஈடுபட்டது, மாணவர்கள் அப்பாஸ், ஞானியார், அப்துல் அஜீஸ்எனத் தெரிய வந்துள்ளது.

எனவே இந்த மூன்று மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் தவிர மேலும் 10 பேரிடம்விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சர்மா என்பவரது தலைமையில் டெல்லியிலிருந்து வந்ததனிப்படை அதிகாரிகளிடம், இந்த விவகாரத்தை நெல்லை போலீஸார் நேற்று ஒப்படைத்தனர். சர்மா தலைமையிலானகுழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

தமிழக போலீஸாரின் உதவியுடன், 10 பேரிடம் விடிய விடிய டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர். இதன்அடிப்படையில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த அவர்கள் முடிவெடுத்துள்ளனர். தேவைப்பட்டால் கோவை சென்றுவிசாரிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், 10 பேரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தவும் டெல்லி குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மிரட்டல் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீஸார் நம்பிக்கைவெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+