அமராவதி பாலத்தை அரசே பராமரிக்கும்: ஜெ.
சென்னை:
கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு சமீபத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பாலத்தை அரசேகையகப்படுத்தி சீரமைக்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:கடந்த மாதம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டத்தை நான் சென்று பார்த்தேன். அப்போது அமராவதி ஆற்றின்குறுக்கே கடந்த திமுக ஆட்சியின்போது தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கட்டிய 5 வருடங்களிலேயே அந்தப் பாலம் சேதமடைந்துள்ளதால் இதில் முறைகேடுகள் இருக்கலாம் என்ற அடிப்படையில்பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரகப் பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டேன்.
அவர்கள் கொடுத்த அறிக்கை அரசுக்கு வந்து அதை தலைமைச் செயலாளர் பரிசீலனை செய்தார். இதன் அடிப்படையில், பாலம்கட்டியதில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் பாலத்தை முறைப்படி கட்டவில்லைஎன்பது தெரிய வந்துள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அமராவதி ஆற்றுப் பாலத்தை அரசே கையகப்படுத்தி அதை சீரமைக்கும். பாலத்தில் உள்ளகோளாறுகள் முழுமையாக சரி செய்யப்பட்டு பின்னர் போக்குவரத்திற்குத் திறந்து விடப்படும்.
மேலும் தனியார் நிறுவனத்துடன் கரூர் நகராட்சி மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, இனிமேல் அந்தப் பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications