சாவு எதிரொலி: சென்னை கலெக்டர் டிரான்ஸ்பர்
சென்னை:
சென்னையில் அடுத்தடுத்து இரண்டு முறை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் இறந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன்அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சித் தலைவராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஆரம்பத்திலிருந்தே குளறுபடிகள் நீடிக்கின்றன. முதலில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டோக்கன்வழங்கப்படாமல், ஆளுங்கட்சிக்குச் சாதகமானவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந் நிலையில், கடந்த மாதம் வியாசர்பாடியில் வெள்ள நிவாரணம் பெற வந்தவர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.அதிகாரிகளும், போலீஸாரும் வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை திட்டமிட்டு செய்யாமல், ஏனோ தானோவென்று மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந் நிலையில், எம்.ஜி.ஆர். நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 42 உயிர்கள் பலியாயின. இது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
நிவாரணப் பணிகளில் குழப்பம் நீடித்து வருவதால், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சித் தலைவராகஎன்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications