கடலூர்- நெல்லூர் இடையே கரை கடக்கும் புயல்
சென்னை:
![]() |
| இன்று அதிகாலை 3 மணிக்கு இன்சாட் செயற்கைக் கோள் எடுத்த படம் |
மாலா புயல் வலுவிழந்த நிலையில் நாளை இரவு கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையை கரையைக் கடக்கும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள இந்தப் புயல் கடலூருக்கு அருகே கிழக்கு தென் கிழக்கில் 300 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.இப்புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 50 முதல் 60 கிமீ வேகத்திற்கு அடுத்த 36 மணி நேரத்திற்குதமிழக வட கடலோரம் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுமையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
ஆனால், எதிர்பார்த்தபடி இன்று இரவு புயல் கரையைக் கடக்காது என்றும், நாளை இரவுதான் அது கடலூருக்கும், நெல்லூருக்கும்இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலூர் உள்பட சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள்கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
கன மழை மற்றும் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில்உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் இன்று தொடங்குவதாக இருந்த அரையாண்டுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டு இன்று தொடங்குவதாக இருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications