விசாரணை கமிஷனால் என்ன பலன்?: கருணாநிதி
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர் நகர் கூட்ட நெரிசல் சாவுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள கமிஷனால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த 42 பேர் நெரிசலில் சிக்கி இறந்தது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்றநீதிபதி ராமன் தலைமையிலான விசாரணைக் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.இதுகுறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், விசாரணைக் கமிஷன் அமைப்பதில் விசேஷம் ஏதுமில்லை. வழக்கமானநடைமுறைதான். ஆனால் இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து நிவாரண உதவிகளை முறையாக வழங்குவது மட்டுமே சரியான செயலாக இருக்கமுடியும். இதற்காக ஆளுனரை சந்தித்து முறையிட நாங்கள் திட்டமிடவில்லை. யார் ஆலோசனை கூறினாலும் அதை இந்த அரசும்,ஆட்சியாளர்களும் கேட்க மாட்டார்கள்.
மாவட்ட அளவில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று முன்னர் கூறினார்கள். ஆனால்அப்படி குழுக்கள் அமைக்கப்படவில்லை.
சுனாமி வந்தபோதும் இதேபோல கோரிக்கை விடுத்தோம். அதையும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் சுனாமியால்பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னும் கூட நிவாரணம் கிடைக்கவில்லை.
இப்போது கன மழையால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணம் தரும்போது கூட அதை நிவாரணத் தொகை என்று கூறி இவர்கள்தரவில்லை. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டுதான் பணத்தைத் தருகிறார்கள்.
இந்த அரசாங்கத்தின் செயல்களில் எதிலும் ஒரு முறையும் இல்லை, ஒழுங்கும் இல்லை. இதனால் தான் இவ்வாறு அசம்பாவிதசம்பவங்கள் நடக்கின்றன என்றார் கருணாநிதி.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications