மத்திய அமைச்சர் பி.எம். சயீத் மரணம்
டெல்லி:
மத்திய மின்துறை அமைச்சர் பி.எம். சயீத் தென் கொரியாவில் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று இந்தியா கொண்டுவரப்படுகிறது.
65 வயதான பி.எம். சயீத் குடல்வீக்க நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நோயின் தீவிரம் அதிகரித்ததால் மேல் சிகிச்சைக்காகதென் கொரியாவில் சியோல் நகருக்குச் சென்றார்.
அங்கு ஹூண்டாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரது உடல் இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறது. மறைந்த அமைச்சர் சயீதுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 7 மகள்கள்உள்ளனர்.
லட்சத் தீவுகளைச் சேர்ந்த சயீத், இதுவரை 10 முறை எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில்வெறும் 78 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனாலும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கிய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி அவரை மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்.
இரு முறை நாடாளுமன்ற சபாநாயகராகவும் இருந்துள்ள சயீத், தமிழ், மலையாளம், கன்னடத்திலும் தேர்ச்சி பெற்றவர்.
பி.எம் சயீத் மரணம் அடைந்த செய்தி அறிந்த பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சயீதின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதியும் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் உள்பட பல மொழிகளை அறிந்த சயீத் என்நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் என சயீதின் மனைவிக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
சயீத் மறைவைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்துறை அமைச்சர் பொறுப்பு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறைஅமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications