சன், ஜெயா டிவி மீது கேப்டன் மீண்டும் பாய்ச்சல்
சென்னை:
வெள்ள நிவாரண உதவிகள் தொடர்பாக இரண்டு முக்கிய தொலைக் காட்சிகள் (சன், ஜெயா டிவிகள்) வெளியிடும்செய்திகளால்தான் மக்கள் குழப்பமடைந்து, பரிதாப மரணத்தை சந்திக்கின்றனர் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகதின்தலைவர், நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம்விசாரித்தார் விஜயகாந்த்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெள்ள நிவாரண உதவிகள் பெறும்போது மக்கள் நிதானமாகவும்,பொறுமையாகவும் அதை அணுக வேண்டும். அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்று அவசரப்படாமல்,நிதானமாக எதையும் செய்ய வேண்டும்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பொதுவாக தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கியமான தொலைக்காட்சிகள்தான் காரணம் என நான்நினைக்கிறேன். ஒரு டிவியில் (ஜெயா டிவி) வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு விட்டது என்று செய்தி வருகிறது.இன்னொரு டிவியில் (சன் டிவி) வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை, மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று செய்திவருகிறது.
இதைப் பார்க்கும் பொதுமக்கள் குழப்பமடைகிறார்கள். எனவே ஊடகங்கள் செய்திகளை வழங்கும்போது மக்களின் நலனையும்கருத்தில் கொண்டு செய்திகளைத் தர வேண்டும்.
வெள்ள நிவாரண நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது. இது எதிர்பாராத சம்பவம்.போன உயிர் திரும்பி வராது. இதுபோன்ற கொடுமைகள் இனிமேலும் தொடராமல் என்ன செய்ய வேண்டும் என்றஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும்.
இனிமேலாவது ரேஷன் கடைகள் மூலமோ அல்லது மக்களையே நேரில் சந்தித்தோ உதவிகளை வழங்க அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications