ஜனவரியில் மத்திய அமைச்சரவை மாற்றம்
டெல்லி:
மத்திய அமைச்சரவை ஜனவரி மாதத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் குறித்து அடிக்கடி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில்நடைமுறைப்படுத்தப்படாமல் தள்ளி போகிறது. இருந்தாலும் இந்த முறை, மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகவேஇருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏனென்றால் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் அதில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது 7 இடங்கள் அமைச்சரவையில்காலியாக உள்ளன. ஏற்கனவே சிபுசோரன், ஜெகதீஷ் டைட்லர், குலாம்நபி ஆசாத், ஜெய்பிரகாஷ் நாராயண யாதவ் ஆகியோர்பதவி விலகியதாலும், சுனில் தத், சயீத் மரணம் அடைந்ததாலும் அந்த இடங்கள் காலியாக உள்ளன.
எனவே அமைச்சரவையில் புதிய நபர்களை சேர்க்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்கள்செயல்பாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திருப்தி இல்லாததால் அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க திட்டமிட்டுஉள்ளார்.
அவற்றுடன் 7 காலியான இடங்களையும் சேர்த்து விரிவான மாற்றத்தை அமைச்சரவையில் செய்ய அவர் முடிவெடுத்துள்ளதாகதெரிகிறது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்என தெரிகிறது. ஜனவரி முதல் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம்.
அமைச்சரவையில் தற்போது முஸ்லீம்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை. ஏற்கனவே இருந்த குலாம் நபி ஆசாத் காஷ்மீர்முதலமைச்சராகி விட்டார். முகமது சயீத் மரணமடைந்துவிட்டார்.
தற்போது கேரளாவைச் சேர்ந்த அகமது மட்டுமே மத்திய அமைச்சராக உள்ளார்.
காங்கிரஸ் முஸ்லீம் முக்கிய புள்ளிகளான மோஷினா கித்வாய், ஏ.ஆர். அந்துலே, ஜாபர்ஷெரீப், சல்மான் குர்ஷீத் ஆகியோர்மத்திய அமைச்சரவையில் இடத்தை எதிர்பார்க்கின்றனர். இவர்களில் ஜாபர் ஷெரீபும், குர்ஷீத்தும் எம்பிகளாக இல்லை. கித்வாய்உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றாலும் சத்தீஷ்கரில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எனவே கித்வாய் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications