ஜெவுக்கு கருணாநிதி கேள்விகளால் ஒரு வேள்வி
சென்னை:
சிறுசேரியில் உள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தொடர்பாக முதலமைச்சர்ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி சரமாரியாக கேள்விகள் தொடுத்துள்ளார்.
இந்தப் பகுதியில் உள்ள அரசு நிலம் சுமார் 102 ஏக்கர் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு (ஏக்கர் ரூ. 15 லட்சம்வீதம்) விற்கப்பட்டுள்ளது. ரூ. 200 கோடிக்கு விற்கப்பட்டிருக்க வேண்டிய நிலம் வெறும் ரூ. 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்த நிலத்துக்கு சாலை, மின், நீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பணிகளைச் செய்து தர ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் ஆகும் என்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தையே ரூ. 15லட்சத்துக்கு விற்றுவிட்டு, அந்த நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் தனது பணத்தை செலவிட்டு அடிப்படை வசதிகளை செய்துதர அரசு ஏன் ஒப்புக் கொண்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எழுப்பியுள்ள கேள்விகளின் விவரம்:
1. தொழிற்சாலைகளுக்கு மட்டுமே தரப்பட வேண்டும் என்று திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட இடம், சிங்கப்பூர் நிறுவனத்துக்குவீடுகள் கட்டுவதற்கு தரப்பட்டுள்ளதோடு அப்படி தொழிற்சாலைக்கு இடத்தை ஒதுக்கும்போது கூட 99 ஆண்டு குத்தகைக்கு தான்தரப்பட வேண்டும் என்பதற்கு மாறாக தனியார் நிறுவனத்துக்கு முழு கிரயம் செய்து விற்றது ஏன்?
2. கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஒரு ஏக்கர், 2 ஏக்கர், 5 ஏக்கர் என்ற அளவுக்குத்தான்ஒதுக்க வேண்டும். இந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டும் மொத்தமாக 102 ஏக்கர் விற்கப்பட்டது ஏன்?
உண்மையிலேயே அங்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அரசு நிறுவனமான வீட்டு வசதிவாரியத்தின் மூலம் தானே கட்டித் தந்திருக்க வேண்டும்?
3. டெண்டர் கோரி விற்காமல், தனியாக ஒருவரை அழைத்துப் பேசி நிலத்தை விற்றால் ஊழல் நடந்துள்ளது என்பது தானேபொருள்?
4. சிங்கப்பூர் நிறுவனம் வீடுகள் கட்டி லாபம் சம்பாதிக்க உள்ள நிலையில் அப் பகுதியில் சாலை வசதி, மின் வசதி, தண்ணீர் வசதிஆகியவற்றை அரசு செலவில் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டது ஏன்?
5. இந்த ஊழல் குறித்து கவர்னரிடம் மனு கொடுத்து பல நாட்கள் ஆகியும் இன்று வரை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்துஎந்தவித மறுப்பும் இல்லாததில் இருந்தே ஊழல் நடந்தது உண்மை என்பது ஊர்ஜிதமாகிறதல்லவா?
6. சிறுசேரி நிலத்தை திடீரென மெட்ரோ வாட்டர் எல்லைக்குள் சேர்த்து குடிநீர் வழங்க அரசாணை பிறப்பித்திருப்பதன் உள்நோக்கம் என்ன?
7. சிங்கப்பூர் நிறுவனத்திடம் பத்திரப் பதிவு கட்டணத்தைக் கூட முறைப்படி பெறாமல் குறைவாக அரசு பெற்றது ஏன்?
8. இதே இடத்தில் விப்ரோ நிறுவனத்திற்கும், சத்யம் சாப்ட்வேர் நிறுவனத்துக்கும் ஏக்கர் ரூ. 45 லட்சம் என்ற வீதத்தில் நிலத்தைவிற்ற சிப்காட், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு மட்டும் ஒரு ஏக்கரை வெறும் ரூ. 15 லட்சத்துக்கு விற்றது ஏன்?
9. அரசிடம் இருந்து சிப்காட் நிறுவனம் குத்தகைக்கு பெற்ற நிலத்தை அந் நிறுவனம் எப்படி தனியாருக்கு விற்க முடியும்?
10. இந்த கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பாரா? அல்லது மெளனம் சாதிப்பதன் மூலம் ஊழல் நடந்ததுஉண்மை என ஒப்புக் கொள்கிறாரா?
இவ்வாறு கேள்விகளால் வேள்வி நடத்தியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications