நிவாரண டோக்கன் விற்கவில்லை: போலீஸ் மறுப்பு
சென்னை:
சென்னையில், மழை வெள்ள நிவாரண டோக்கன்களை போலீஸார் விற்கவில்லை என்று மாநகர காவல்துறை மறுத்துள்ளது.
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்களை சென்னை நகர போலீஸார் பணம் பெற்றுக் கொண்டு விற்பனைசெய்வதாகக் கூறப்படுகிறது.ஒரு டோக்கனுக்கு குறைந்தது ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு அவர்கள் விற்பனை செய்வதாக பொது மக்கள்கூறுகின்றனர்.
ஆனால், இதை காவல்துறை மக்கள் தொடர்பு உதவி ஆணையர் விட்டல்ராமன் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19.12.2005 அன்று வெளியான நாளிதழ் ஒன்றில், நிவாரண சாவுக்கு காரணம் போலீஸார்விற்ற போலி டோக்கன், அதிர வைக்கும் புதிய தகவல் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இதில் வெள்ள நிவாரண வரிசையில் இடம் பிடிப்பதற்கான டோக்கன்களை போலீஸாரே விற்றனர். அதை பல இடங்களில்சகஜமாக காண முடிந்தது. மாம்பலம் கிண்டி வட்டம் தி.நகர் பகுதியில் இது அதிக அளவில் காணப்பட்டது.
எம்.ஜி.ஆர். நகர் சம்பவம் நடப்பதற்கு முன்பே, தி.நகரில் டோக்கன் கொடுக்கிறார் ஒரு போலீஸ்காரர் என்ற முற்றிலும் தவறானசெய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நாளிதழில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருப்பது மாம்பலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் தகப்பன் என்ற காவலராவார்.
இவர் 17.12.2005 அன்று முத்துரங்கம் சாலையில் உள்ள டி.யூ.சி.எஸ். ரேஷன் நிவாரண முகாமில் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டிருந்தார்.
வரிசையில் நன்றிருந்த பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும், எந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதைக்கண்டறிந்து எந்தக் கவுண்டருக்கு செல்ல வேண்டும் என்ற தகவலைக் கூறி வழிகாட்டியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் கையில் உள்ள துண்டு காகிதத்தில் அவர்கள் செல்ல வேண்டிய கவுண்டர்எண்ணை எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு எதிரே நிற்கும் பெண் தி.நகர் முத்துரங்கம்சாலை, கார்ப்பரேஷன் 2வதுதெருவில் வசிக்கும் அய்யாநாதன் என்பவரின் மனைவி வசந்தி ஆவார்.
அவருக்கு அருகில் மஞ்சள் சேலையுடன் இருப்பவர் ராஜாமணி என்பவரின் மனைவி விஜயா ஆவார்.
காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான, அவதூறான தகவலை வெளியிட்டுள்ளது வேதனையைத் தருகிறதுஎன்று கூறியுள்ளார் விட்டல் ராமன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications