ஜாதிகளை ஆதரிக்கும் விஜய்காந்த்
கோவை:
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் தனித் தனியாக போட்டியிடத் தயாரா என்று தேசியமுற்போக்கு திராவிட கழகத் தலைவரான நடிகர் விஜயகாந்த் சினிமா பாணியில் சவால் விட்டுள்ளார்.
கோவை சிவானந்தா காலனியில் விஜயகாந்த் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அவர் பேசுகையில், நான் அரசியலுக்குவரும் வரை என்னை நல்லவர் என்று பலரும் போற்றினர், ஆனால் அரசியலுக்கு வந்து விட்டதால் என்னைக் கெட்டவன் என்றுதூற்றுகிறார்கள். இதனால் நான் கவலைப்படவில்லை.வரும் சட்டசபைத் தேர்தலில் நான் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப போகிறேன். இங்கே பல கட்சிகள் கூட்டணிஅமைக்க மும்முரமாக உள்ளன. நான் சின்னப் பையன்தான். எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். அப்படிக் கூறுபவர்களைப்பார்த்துக் கேட்கிறேன்.
நான் தனித்து நிற்பதைப் போல நீங்களும் தனித்து நிற்கத் தயாரா? எனக்கு சக்தி இருக்கிறது, தனியாக போட்டியிடுகிறேன்.நீங்களும் உங்களது சக்தியை நிரூபிக்க தனியாக போட்டியிடுங்கள் பார்க்கலாம்.
லஞ்சம் கொடுப்பதை ஆரம்பித்து வைத்தது பணக்காரர்கள்தான். லஞ்சத்தை ஒழிக்க முடியும். முடியாதது என்று எதுவுமே இல்லை.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இந்திய அளவில் சரியான அங்கீகாரம்கிடைப்பதில்லை. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சரியானஅங்கீகாரம் கிடைப்பதில்லை. காரணம் விளையாட்டிலும் அரசியல்.
சாதியை நான் மதிக்கிறேன். ஆனால் அதை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications