திமுகவின் வதந்திகளை நம்பாதீர்: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ள நிவாரண உதவி குறித்து எதிர்கட்சிகள் வேண்டுமென்றே பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றுமுதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 18ம் தேதி கே.கே. நகரில் வெள்ள நிவாரண முகாம் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 42 பேர் குடும்பத்தினருக்கும் எனதுஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இச் சம்பவம் எனக்கு மிகுந்த துயரத்தையும், வேதனையையும்அளித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என நான் பலமுறைஉறுதி கூறியும் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெள்ள நிவாரண உதவிகள் இது வரை தமிழகத்தில் 18 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மட்டும்5.11 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு தெரு பாதிக்கப்பட்டால், வீடு வீடாக சென்று கணக்கெடுக்காமல், அந்தத் தெருவில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் தொகுப்பு உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு நான் ஆணையிட்டுள்ளேன்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. மழை,வெள்ளத்தால் ஒரே ஒரு நாள் நீர் தேங்கியிருந்தாலும் கூட அங்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வேறு எந்த அரசும் இதுபோன்ற உதவியை வழங்கவில்லை. தமிழக அரசு மட்டுமே வழங்கி அபார சாதனைபடைத்துள்ளது. தமிழக அரசின் இந்த சீரிய பணியை கெடுத்து, களங்கம் ஏற்படுத்த முயலும் விஷமிகள், பொய்யான வதந்திகளைமக்களிடையே பரப்பி, கொடிய முறையில் செயல்பட்டிருப்பது அருவருக்கத்தக்கது.

மக்கள் ஒத்துழைப்புடன் வெள்ள நிவாரண பணிகள் முழு வீச்சில் அமைதியாகவும், தடையின்றியும் நடைபெற்று வருவதை கண்டுபொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள், எனது தலைமையிலான அரசுக்கு அவப்பெயரைஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வீணாண வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அவர்களின் வீணான வதந்திக்கு பலியானது அப்பாவி மக்களின் 42 உயிர்கள். திமுகவினர், அதிமுக அரசு மக்களுக்கு செய்துவரும் பல்வேறு உதவிகளை பார்த்து பொறுக்க முடியாமல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகையசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொறாமைத் தீயில் புழுங்கித் தவித்து, வதந்தி பரப்பி மனித உயிர்களைப் பலி கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.எதையாவது செய்து, குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் திமுக ஆதரவு நச்சு சக்திகள், அரசுக்கு எதிராக களங்கம்ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரண தொகுப்பு உதவி உண்டு என திரும்பத் திரும்ப நான் கூறி வருகிறேன்.ஆனால் முதலில் வரும் 300 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண உதவி என்று சிலர் புரளி பரப்பி வருகின்றனர். இதுஆதாரமற்றது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்க போதுமான நிதியை நான் ஒதுக்கியுள்ளேன். அந்தப் பணி முடியும் வரைநான் ஓயப் போவதில்லை. இதை நானே உறுதிமொழியாக கூறியிருப்பதால், தொகுப்பு உதவி குறித்து யாரும் கவலைப்படத்தேவையில்லை.

எனவே திமுக ஆதரவு சுய நல சக்திகளின் பொய்ப் பிரசாரத்தையும், வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம். அரசு கூறுவதைமட்டுமே மக்கள் நம்பிப் பின்பற்ற வேண்டும்.

நிவாரண உதவிகளை கொடுத்து முடிப்பதற்கு எந்த கடைசி தேதியையும் நிர்ணயிக்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும்நிவாரண உதவிகள் சென்றடையும் வரை தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்படும்

வெள்ள நிவாரணம் வழங்கும் அரசின் பணியைக் கெடுப்போரின் தீய நோக்கங்களை முறியடிப்பேன். திமுக தலைமையிலானஎனது அரசியல் எதிரிகளின் பொய்ப் பிரசாரத்திற்கு பொதுமக்கள் செவி சாய்க்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+