ஜெயேந்திரர் மீதான திருட்டு வழக்கில் உள் நோக்கம்: நீதிபதி
சென்னை:
திருவாரூர் மாவட்டம் சிவன் கோவிலில் நவரத்தின கற்களைத் திருடியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், சம்பந்தப்பட்டமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னும் 2 வாரங்களுக்குள் ஜெயேந்திரர் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியகுடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகளின் பீடங்களுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த நவ ரத்தினகற்களை ஜெயேந்திரர் திருடிச் சென்று விட்டார் என்று மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் போலீஸில் புகார்கொடுத்துள்ளார்.(இவரை போயஸ் கார்டனை ஆட்டிப் படைக்கும் மன்னார்குடி கும்பல் தான் தூண்டி விட்டதாக ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள்கூறுகின்றனர்)
இந்த திருட்டுப் புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டூர்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்துப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இதில் உள்நோக்கம் இருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது. கோவில் சம்பந்தப்பட்ட யாரும் புகார் தராத நிலையில்,வெளியார் ஒருவர் புகார் கூறியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேருக்கு முன் ஜாமீன் தர உத்தரவிடப்படுகிறது. அனைவரும் தலா ரூ. 5,000 சொந்த ஜாமீன்,அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்கி முன் ஜாமீன் பெறலாம்.
சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் (மன்னார்குடி) நீதிமன்றத்தில் அனைவரும் இன்னும் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீன் ரத்தாகி விடும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி உசேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications