42 பேர் பலி குறித்து பேச அனுமதி மறுப்பு மக்களவையில் திமுக, பாமக, கம்யூ வெளிநடப்பு
டெல்லி:
சென்னையில் 42 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மக்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக்கண்டித்து திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்பிகள் அவையிலிருந்து வெளிநடப்புசெய்தனர்.
நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகப் பேச அனுமதி கோரி தமிழக எம்பிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.கேள்வி நேரம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.அப்போது பேசிய மதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி கிருஷ்ணன், வெள்ள நிவாரணம் பெறுவதற்கான டோக்கன் பெற சுமார் 4,000பேர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். 37 பேர்படுகாயமடைந்தனர். கூட்டத்தை முறைப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் இத்தகைய துயர சம்பவம்நடந்துள்ளது என்றார்.
இதே போல் மதிமுக உறுப்பினர் ரவிச்சந்திரன், பாமக உறுப்பினர் செந்தில், காங்கிரஸ் உறுப்பினர் கார்வேந்தன், திமுக உறுப்பினர்சி.குப்புசாமி, மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் பெல்லார்மின், பி.மோகன் ஆகியோரும் இது தொடர்பாக பேச நோட்டீஸ்கொடுத்திருந்தனர். அவர்களும் கருத்து தெரிவித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்று சபைத் தலைவர் கூறினார்.
இது மாநிலப் பிரச்சினையாக இருந்தாலும் அதை எழுப்ப அனுமதித்தேன். இதற்கு மேல் மாநில விவகாரம் குறித்து பேச முடியாது.மத்திய அரசில் தமிழகத்தை சேர்ந்த திறமையான பிரதிநிதிகள் உள்ளார்கள். மத்திய அரசு இதை கவனித்துக் கொள்ளும் என்றுநம்புகிறேன் என்று கூறிய சபைத் தலைவர் சோம்நாத் சாட்டரிஜி இச் சம்பவம் குறித்து தொடர்ந்து பேச அனுமதி மறுத்தார்.
இதையடுத்து திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு எழுந்து, இது மிகவும் உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாகஇருப்பதால் ஒவ்வொரு நிமிடம் பேச உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பத்து பேரும் ஒவ்வொரு நிமிடம் பேசினால் பத்து நிமிடம் ஆகிவிடும் அவையின் நேரம் மிகவும் முக்கியமானது என்பதால்இனிமேலும் அனுமதிக்க முடியாது என்றார் சட்டர்ஜி.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து திமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழகஎம்பிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதே போல் ராஜ்யசபாவில் சென்னை நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவம் பற்றி காங்கிரஸ் எம்பிகள் பிரச்சினைஎழுப்பினார்கள். இதை தொடர்ந்து காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்பி நாராயண சாமி எழுந்து சென்னையில் வெள்ள நிவாரண நெரிசலில்சிக்கி 42 பேர் பலியானார்கள். ஆயிரம் ரூபாய்க்காக ஒவ்வொரு உயிரும் பலியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2வது முறையாக இந்தசம்பவம் நடந்துள்ளது என்றார்.
இதற்கு அதிமுக எம்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இரு கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம்ஏற்பட்டது. பிறகு சபைத்தலைவர் பைரோன்சிங் செகாவத் அவர்களை சமாதானப் படுத்தினார்.
அதை தொடர்ந்து பாஜக எம்பி அலுவாலியா பேசுகையில் இயற்கை பேரழிவு காரணமாக 42 பேர் பலியாகியிருப்பதால் அவர்கள்மறைவுக்கு சபையில் அனுதாப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications