ப.சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக அமளி
டெல்லி:
அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி தனது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு வெளிநாட்டு வங்கியில் இருந்து ரூ. 6 கோடிகடன் வாங்கித் தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதற்கு விளக்கம் கொடுக்காமல் நிதி மசோதாவைஅறிமுகம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜ்யசபாவில் வரி விதிப்புக்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. திமுகவைச் சேர்ந்த நிதித்துறை இணையமைச்சர்பழனி மாணிக்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.இதற்கு அதிமுக எம்பிகள் ஜோதி, நாராயணன், மலைச்சாமி, டிடிவி தினகரன், கோகுல இந்திரா, எஸ்.எஸ். சந்திரன், காமராஜ்உள்பட 12 பேரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதிகாரத்தை துஷ்ப்பிரயோகம் செய்ததாக சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு உள்ளது. அது பற்றி அதிமுக நோட்டீஸ்கொடுத்திருந்தும் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை, அதனால் சிதம்பரம் அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்றனர்.இவர்களின் கருத்துக்கு பாஜக எம்பியும் மாஜி நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவும் ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அதிமுக எம்பி ஜோதி எழுந்து, இது ஒரு முக்கியமான மசோதா என்பதால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சபையில் இருக்கவேண்டியது அவசியம் என்று வற்புறுத்தினார். இதே போல் மற்ற அதிமுக எம்பிகளும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.சிதம்பரம் திட்டமிட்டே சபைக்கு வராமல் தவிர்ப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் சிதம்பரம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக தனது குடும்பத்தினக்கு லாபம் கிடைக்கச் செய்ததாக குடியரசுத்தலைவர், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் மனு கொடுத்திருக்கிறோம். இந்த அவையில் அதை விவாதிக்க கூடநோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்.
அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அவர் எப்படி அமைச்சராக பதவியை தொடர முடியும்.மசோதாவை தாக்கல் செய்ய முடியும். இந்த பிரச்சினையில் தீர்வு காணப்படாமல் அவருக்கு பதிலாக இணையமைச்சர் மசோதாதாக்கல் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் ஜோதி.
இதையடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி எழுந்து கேபினட் அமைச்சருக்கு பதிலாகஇணை அமைச்சர் மசோதாவை தாக்கல் செய்வது ஒன்றும் புதிதல்ல என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் அதிமுக எம்பிகளுக்கு அவரது பதில் திருப்தி அளிக்காததால் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி சபையின்மையத்துக்கு சென்று கோஷமிட்டனர். ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள்வற்புறுத்தினார்கள்.
தமிழகம் உள்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிகள் அதிமுகவினருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவையை தலைவர் பைரோன்சிங் செகாவத் ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications