42 பேர் பலியான பள்ளியில் யாகம்!!
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பரிதாபமாக பலியான பள்ளி வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. காரணம்,ஆவிகளை விரட்டுவதற்காம்.
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில் உள்ள அறிஞர் அண்ணா மாநகராட்சிப் பள்ளியில் கடந்த 19ம் தேதி அதிகாலை நடந்தகூட்ட நெரிசலில் சிக்கி வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த அப்பாவிப் பொது மக்கள் 42 பேர் பரிதாபமாக இறந்தனர்.இச் சம்பவம் நடந்து 3 நாட்களாகி விட்ட நிலையில் இப்பள்ளி வளாகத்தில் ஆவிகள் நடமாடுவதாக சிலர் புரளி கிளப்பிவிட்டுள்ளனர். இந்தப் புரளியால், அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரும்பீதியடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை பள்ளி திறந்து அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கின. பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவியர் 42பேரின் உயிரைப் பலி வாங்கிய பள்ளி நுழைவாயிலை நெருங்கியதும், ஆவி பீதியால் நடுங்கினர். பல பெற்றோர்களும்குழந்தைகளை உள்ளே அனுப்பப் பயந்தனர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூடிப் பேசி ஆவிகளை விரட்ட தர்ப்பண யாகம் நடத்தமுடிவு செய்யப்பட்டது. உடனடியாக அய்யர் வரவழைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தின் நான்கு மூலைகள் மற்றும் நுழைவாயில் ஆகிய இடங்களில் யாகம் நடத்தப்பட்டு பூசணிக்காய்உடைக்கப்பட்டது.
இதன் பின்னரே மாணவ, மாணவியர் பள்ளிக்குள் நுழைந்தனர். இதற்கிடையே, சம்பவம் நடந்த நுழைவாயிலை மூடி விடவேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நுழைவாயில் ராசியில்லை என்று கூறிய அவர்கள், இதற்குப் பதிலாக நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டுள்ள இன்னொருநுழைவாயிலை திறந்து விடுமாறு தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இவர்களை என்னவென்று சொல்வது...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications