இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவக் கூடாது: வைகோ
ஈரோடு:
இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவினால் தமிழகமும் காஷ்மீராகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்னும் நூலைவெளியிட்டு வைகோ பேசியதாவதுஇந்தியா என்பது நாடல்ல. உபகண்டம். இக் கருத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். தேசிய மொழிகள் பட்டியலில்தமிழ் இல்லையென்றாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் தமிழுக்கு ஆபத்து வந்தால் தேசிய இனத்தின் உரிமைக்காக போராட வேண்டிய சூழல் உருவாகும். மதத்தால்பாகிஸ்தானும், இனத்தால் அயர்லாந்தும், மொழியால் வங்காளதேசமும் பிரிந்தது. அப்படியொரு நிலை இந்தியாவிற்குவந்துவிடக் கூடாது.
பழங்காலத்தில் இருந்தே ஈழத்தில் தமிழர்கள் தனி இனமாக வாழ்ந்ததற்கு சான்றுள்ளது. சிங்கள மொழி பிரதானப்படுத்தப்பட்டபோது தான் தனி ஈழப் பிரச்சினை எழுந்தது. தனி ஈழம் அமைப்பது தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.
இந்தியா-இலங்கை ராணுவ ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாக இருந்தபோது அதற்கு எதிராக பிரதமர், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பேசினேன். அதையடுத்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுகளத்தை இந்திய உதவியுடன் சீரமைத்துவருவதாக இலங்கை விமானப்படை தளபதி கூறியுள்ளார். இந்திய அதிகாரிகள் விரைவில் பார்வையிட வர உள்ளதாகவும்கூறியுள்ளார்.
பலாலி விமான தளத்தை பயன்படுத்தி 5 லட்சம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. எனவே இந்த விமான தளம்சீரமைக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழ்நாட்டு தமிழர்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி இலங்கைத்தமிழர்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இலங்கை ராணுவத்திற்கு ஏற்கனவே இந்தியா உதவி செய்துள்ளது. மீண்டும் இதுபோல இந்தியா அந்த நாட்டு ராணுவத்திற்குஉதவக் கூடாது. இலங்கையில் போர் மேகம் சூழ்ந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளியாகின்றன. இலங்கைக்கு உதவிசெய்யும் முடிவு எதையும் பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கமாட்டார்.
ஆனால் ஒரு சில இந்திய அதிகாரிகள், இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளதால், இக் கருத்துஅவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றார் வைகோ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications