அய்யர் லேட்: சாட்டர்ஜி சுழற்றிய சாட்டை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அவையில் இல்லாமல் லேட்டாக வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கரஅய்யருக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.இதையடுத்து தாமதமாக வந்தததற்கு நிபந்தனை இல்லாத மன்னிப்புக் கேட்டார் மணி. ஆனால், அதை எழுத்துப் பூர்வமாகத்தந்துவிட்டு அவையில் கேள்விகளுக்கு பதில் சொல்லுமாறு சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தாமதமாக வந்தததற்காக மிகவும் வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன் என்று எழுதி சபாநாயகரிடம் தந்தார்மணி.
இதைத் தொடர்ந்தே அவரை அவையில் பதிலளிக்க அனுமதித்தார் சாட்டர்ஜி.












Click it and Unblock the Notifications