போலீஸ் கமிஷ்னர் நடராஜுக்கு திமுக நோட்டீஸ்
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திமுக சார்பில்அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சார்பில் இதுதொடர்பாக வழக்கறிஞர் ரவீந்திரன், நடராஜுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்விவரம்:கடந்த 21ம் தேதி வெளியான நாளிதழ் ஒன்றில் தாங்கள் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதில், எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 18ம் தேதி நிவாரண உதவி வாங்க காத்து இருந்த மக்களோடு, நூற்றுக்கணக்கான திமுகவினரும்கலந்து நின்றதாகவும், நிவாரணம் பெறுவதற்கு இதுதான் கடைசி நாள், முதலில் செல்வோருக்குத்தான் உதவி கிடைக்கும் என்றுதிமுகவினர் புரளி கிளப்பி விட்டதாகவும் கூறியுள்ளீர்கள்.
இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். உங்கள் தலைமையிலான போலீஸார் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும்,ஆளுங்கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதற்காகவும் இதுபோன்ற செயலில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
மக்களைக் காக்கும் பணி தொடர்பாக உங்களுக்கு அளிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அந்தஸ்தை மறந்து நீங்கள் செயல்பட்டுஇருக்கிறீர்கள். இந்த சம்பவத்தில் 42 பேர் இறந்ததற்குக் காரணமே போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம்தான்.
உங்களது கவனக்குறைவால் உங்கள் தலைக்கு கத்தி வந்து விடுமோ என்றும், மரியாதை இல்லாத ஒரு பதவிக்கு நீங்கள் மாற்றம்செய்யப்பட்டு விடுவீர்களோ என்று பயந்தும் உள் நோக்கத்தோடு ஆதாரமற்ற செய்தியைக் கூறி இருக்கிறீர்கள்.
நீங்கள் கூறியதைப் பார்க்கும்போது உங்கள் விசாரணை நியாயத்தில் இருந்து வழி தவறிச் செல்லும் என்று தெள்ளத் தெளிவாகவேதெரிகிறது. சம்பவம் குறித்து அறிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் பேசியிருப்பது அதிகாரவரம்பை மீறிய செயலாகும்.
எனவே நீங்கள் கொடுத்த தவறான பேட்டியைத் திரும்பப் பெற வேண்டும். 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு திமுக அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நட்ராஜ் மீது பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரிடம் புகார் தர திமுக கூட்டணி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications