போலி: அதிமுகவினர் மீது பாயும் வழக்குகள்
சென்னை:
போலி வாக்காளர்களைச் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தவர்கள் (அதிமுகவினர்), விண்ணப்பத்தில் கையெழுத்துப்போட்டிருந்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
போலி வாக்காளர் விண்ணப்பங்களை ஒட்டுமொத்தமாக அளித்தவர்கள் மீது நடவடிககை எடுக்கக் கூடாது என்று தேர்தல்ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்தவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து விட்டது.இதையடுத்து சுமார் 13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிக்கலில் மாட்டவுள்ளனர்.
இந் நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் மிக வேகமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. போலி வாக்காளர்விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள், அதில் கையெழுத்துப் போட்டிருந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையைதொடங்குமாறு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் நரேஷ் குப்தா இதுவரை வேகம் காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால், உயர் நீதிமன்றம் அதிமுகவின்மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையமும் நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளதால் அதிமுகவினர்மீது நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
தாமதமின்றி தவறு செய்தவர்கள் மீது வழக்குகளைப் போடுமாறு அவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நரேஷ் குப்தாவுக்கு உதவ, மத்திய துணைத் தேர்தல் ஆணையர் அனந்தகுமார் சென்னைக்கு வரவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications