பேசின்பிரிட்ஜ்-எண்ணூர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பேசின் பிரிட்ஜ்-எண்ணூர் 200 அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை காலடிப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைதொடுத்துள்ளார். அந்த மனுவில் பேசின்பிரிட்ஜ்-எண்ணூர் 200 அடி சாலையில் உள்ள அன்னை கனகம்மாள் நகர், கலைஞர் நகர்,பாலகிருஷ்ணா நகர் பகுதியில் நிறைய ஆக்கிரமிப்புகள் செய்து வீடு கட்டியுள்ளனர். அதனால் போக்குவரத்து மிகவும்பாதிக்கப்படுகிறது.காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக திருவள்ளூர் கலெக்டர், அம்பத்தூர் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாருக்கு கொடுத்தமனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் எம்.ஜெயச்சந்திரன் அடங்கிய பெஞ்ச் 3மாதத்திற்குள் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications