நெரிசல் சாவுகள்: துணை கமிஷ்னரும் மாற்றம்
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெரிசல் பலிகள் விவகாரத்தில் கலெக்டர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது காவல்துறைதுணை ஆணையரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிவாரண உதவி பெற வந்த பொது மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் இறந்தனர். இந்தச்சம்பவத்திற்கு அரசின் கவனக்குறைவும், காவல்துறையின் அலட்சியப் போக்குமே காரணம் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டுவருகிறது.ஆனால், திமுகவினர் மீது பழியைப் போட்டு வருகிறது அரசு.
இந் நிலையில், பொது மக்களிடையே நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி நிலவுவதை உளவுப் பிரிவு கண்டறிந்து அரசின்கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து மாவட்டக் கலெக்டர் சந்திரமோகன் மாற்றப்பட்டார். அவருக்கு பதவி ஏதும்தராமல் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
புதிய கலெக்டராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய போலீசாரின் அலட்சியப் போக்கே நெரிசல் பலிகளுக்கு முக்கியக் காரணம் என்றுபொது மக்களிடையே பேச்சு நிலவுகிறது.
இதையடுத்து அங்கு பணியாற்றும் அத்தனை போலீஸாரும் கூண்டோடு மாற்றப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர். நகரை உள்ளடக்கிய தியாகராய நகர் துணை போலீஸ் கமிஷ்னர் சேஷசாயி (சில நாட்களுக்கு முன்புதான்இவர் இந்தப் பொறுப்புக்கு வந்தார்) மாற்றப்பட்டு கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் புதிய துணை ஆணையராக சிபிசிஐடி எஸ்பியான ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல பூக்கடை துணை கமிஷ்னராக இருந்து வந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டு கட்டாயக் காத்திருப்பில்வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய துணை ஆணையராக வட சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications