இனி ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி கிடையாது
சென்னை:
நிவாரண உதவிகள் வழக்குவதில் பெரும் குழப்பம் செய்து வரும் தமிழக அரசு இப்போது புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுகுழப்பத்தை அதிகரித்துள்ளது.
இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது.சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ. 2,000 ரொக்கம், வேட்டி, சேலை,மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
இதில் ஏகக் குளறுபடி நடக்கிறது. ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு (தேர்தல் வருவதை நினைவில் கொள்க) பெரியஅளவில் பணம் நிவாரணமாக தரப்படுவதால், பொதுமக்கள் மத்தியில் இந்த உதவியைப் பெற பெரும் போட்டி நிலவுகிறது.
உரியவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் (இதைக் காட்டினால்தான் உதவி கிடைக்கும்) தவிர, போலியாகவும் ஏராளமானடோக்கன்கள் புழங்கி வருகின்றன (இதற்கு முக்கியக் காரணம் கரை வேட்டிகள்). இதன் காரணமாக நிவாரண உதவி வழங்கப்படும்மையங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிக அளவில் கூட்டம் வருகிறது. இப்படிப்பட்ட ஒரு கூட்டம் கூடியதால்தான் எம்.ஜி.ஆர். நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நெரிசலில் 42 உயிர்கள் பறிபோயின.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் இனிமேல் நிவாரண உதவியை வழங்குவதில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் பொது மக்கள் மத்தியில் கோபமும் எரிச்சலும் நிலவுகிறது. நிவாரண உதவி பெறச் சென்றால் முழு நாளும் அங்கேயேகழிந்து விடுகிறது. வேலைக்குச் செல்ல முடியவில்லை.
இதனால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை உரிய போலீஸ் பாதுகாப்போடு நிவாரணம் தருவதை விட்டுவிட்டு, அந்ததினத்தில் போலீசாலேயே கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நொண்டிச் சாக்கு சொல்லி நிவாரணம் வழங்குவதைநிறுத்துகின்றனர் என்று பொது மக்கள் புலம்புகின்றனர்.
அதே நேரத்தில் சனிக்கிழமைகளில் வழக்கம் போல நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
டோக்கன் பெற்றும், நிவாரண உதவி கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகி முறையிட்டுநிவாரணம் பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
டோக்கனைக் காட்டினாலும் கூட பல இடங்களில் நிவாரண உதவி கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில்ஏன் தான் இத்தனைக் குழப்பமோ?
கூடுதல் மண்ணெண்ணை:
இதற்கிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பொது மக்களுக்கு டிசம்பர் மற்றும்ஜனவரி மாதத்திற்கு கூடுதலாக 3 லிட்டர் மண்ணெண்ணை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
தமிழகத்திற்குக் கூடுதலாக 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியிருந்தேன்.
அதை ஏற்று இரு கட்டமாக இதுவரை 20,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்அடிப்படையில், இந்த மாதமும், அடுத்த மாதமும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம்மாதத்திற்கு 3 லிட்டர் கூடுதல் மண்ணெண்ணை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications