ஓடும் ரயிலில் இருந்து 3 பேரை தூக்கி வீசிய கும்பல்: பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பியது
போபால்:
மும்பையில் இருந்து லக்னெள சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு ஒரு கும்பல் பயங்கர அராஜகம்செய்தது. ஆயுதங்கள் ஏறிய அந்தக் கும்பல் 3 பயணிகளை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு ஒரு பெண்ணைகற்பழித்தது.
போபாலுக்கு 60 கி.மீ. தொலைவில் விதிசா என்ற இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது இச் சம்பவம் நடந்தது.நள்ளிரவில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள்களுடன் போபாலில் அந்த ரயிலில் ஏறியது. அன்-ரிசர்வ்ட்கம்பார்ட்மெண்டில் ஏறிய அக் கும்பல் ரயில் புறப்பட்டவுடன் பயணிகளை அடித்து, உதைத்து நகை, பணத்தை பறிக்கஆரம்பித்தது. பெண்களிடம் அத்து மீறியது.
அதைத் தடுத்த 3 பயணிகளை அந்தக் கும்பல் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் ஜான்சிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 பேரை வெளியில் தூக்கிப் போட்ட அக் கும்பல், ஒரு பெண்ணை ரயிலின் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று கற்பழித்தது.லலித்புட் ரயில் நிலையத்தை அந்த ரயில் நெருங்கியபோது அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்த அந்தக் கும்பல் ரயில்நின்றவுடன் தப்பியோடிவிட்டனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ரயிலில் காவலுக்கு ரயில்வே போலீசார் துப்பாக்கிகளோடு திரிந்தாலும் அவர்களால் பெரும்பாலும் எந்தப் பயனும்இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications