குழந்தைகளை விற்ற 2 பெண் புரோக்கர்கள் கைது
திருச்சி:
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை விற்று வந்த 2 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு பொது மருத்துவமனையில் பிரசவ வார்டில் தவறான உறவினால் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களிடமிருந்தும்,வறுமையால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளையும் விலை பேசி விற்று வரும் கொடுமை கடந்து 8 வருடங்களாகநடந்து வருகிறது.இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து திருச்சி நகர போலீஸ் கமிஷனர் பிரதீப் வி. பிலிப் இது குறித்துவிசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் விசாரணையில் முத்துடையான்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த அழகம்மாள் என்பவர் வறுமை காரணமாக தனக்குபிறந்த குழந்தையை இந்த பெண்களிடம் ரூ. 500க்கு விற்றது தெரிய வந்தது. மேலும் அவரை கட்டாயப்படுத்தியதால் தான் இந்தவிற்பனைக்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
இதே போல் அழகம்மாள் 8 வருடங்களுக்கு முன்பு தனக்கு பிறந்த ஆண் குழந்தையும் இதே புரோக்கர் பெண்கள் மூலமாகவிற்றுள்ளதும் தெரிய வந்தது.
இந்த 2 பெண் புரோக்கர்களும் சுமார் 8 வருடங்களாக குழந்தை விற்பனையை செய்து வந்துள்ளனர்.
ஆண் குழந்தைக்கு ரூ. 1,000மும், பெண் குழந்தைகளுக்கு ரூ. 500 பேரம் பேசி வாங்கி அவர்களை ரூ.10,000 முதல் ரூ.20,000வரை வெளியில் விற்று வந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications