விஜய்காந்துக்கு தேர்தல் ஆணையம் ஆப்பு!
சென்னை:
கட்சியின் சட்ட விதிகளில் ஜனநாயகமே இல்லாததாலும், கட்சியில் எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என்று கட்சியின்சட்டத்தில் விஜய்காந்த் விதியை நுழைத்ததாலும் அவரது கட்சிக்கு அங்கீாரம் அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
விஜயகாந்த் தனது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை மாநிலக் கட்சியாகப் பதிவு செய்யுமாறும், அங்கீகாரம் அளிக்குமாறும்கோரி தேர்தல் கமிஷனுக்கு மனு செய்திருந்தார்.ஆனால், அவரது கட்சியில் சட்ட விதிகளே தெளிவாக இல்லை என்ற காரணத்தால் அவரது கட்சியின் விண்ணப்பத்தை தேர்தல்ஆணையம் நிராகரித்துள்ளது.
கட்சியின் அனைத்து முடிவுகளையும், கட்சித் தலைவரான விஜயகாந்த்தே எடுப்பார் என்று சினிமா பாணியில் இடம் பெற்றுள்ளவாசகம், ஜனநாயக விரோதமாக உள்ளதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம் அந்த வாசகத்தை நீக்க வேண்டும் என்றும்கூறியுள்ளது.
இதையடுத்து சட்ட விதிகளை மாற்றி அமைக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் பதிவு கோரிவிண்ணப்பிக்கவுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்று விட விஜயகாந்த் மும்முரமாகஉள்ளார்.
அதே நேரத்தில் ஆந்திராவில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஆரம்பித்துள்ள கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்அளித்துள்ளது.
தனி தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு பாஜக ஆதரவு தெரிவிக்காத காரணத்தால், கோபமடைந்த விஜயசாந்தி அக்கட்சியிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இக் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரிக்குமாறு மத்தியத் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தார். அவரதுகோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் தல்லி தெலுங்கானாவை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications