கூவம்: ரூ. 10 கோடி கட்டடங்கள் டமால்
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்பிலான கட்டடங்கள் ஒரேநாளில் இடித்துத் தள்ளப்பட்டன.
மதுரவாயல், நொளம்பூர், திருவேற்காடு, கோலடி, வேலப்பன்சாவடி, வானகரம், நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் கூவம் ஆறுஓடுகிறது. இந்த ஆற்றின் இரு கரைகளையும் பெருமளவில் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கட்டடங்கள் உள்ளன.இதன் காரணமாக கூவம் ஆற்றின் அகலம் குறைந்து வெள்ளப் பெருக்கின்போது தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தைஏற்படுத்துகிறது.
இதையடுத்து கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.முதலில் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மீது கை வைக்கப்பட்டது.
வியாழக்கிழமை வரை கூவம் ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 18 கட்டடங்களின் நீண்ட மதில் சுவர், 20வணிக வளாகங்கள், 50 மரங்கள், 15 பங்களாக்கள், ஒரு கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை இடிக்கப்பட்டுள்ளதாக மாவட்டஉதவி கலெக்டர் சுஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டும் ரூ. 10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் இடித்துத்தரைமட்டமாக்கினர்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் வரைஇந்தப் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications