தர்மபுரி பஸ் எரிப்பு: இனி தினசரி விசாரணை
சேலம்:
தர்மபுரியில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் உயிரோடுஎரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், திங்கள்கிழமை முதல் தினசரி விசாரணை நடைபெறும் என சேலம் நீதிமன்றம்அறிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைஎதிர்த்து அதிமுகவினர் நடத்திய போராட்டத்தில் தர்மபுரி அருகே வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்துக்குதீவைக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிரோடு கருகி இறந்தனர்.இந்த வழக்கு முதலில் தர்மபுரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த வழக்கை போலீசார் கேலிக் கூத்தாகநடத்தினர். அரசு வழக்கறிஞரும் போலீசாரும் கூட்டு சேர்ந்து கொண்டு தவறு செய்த அதிமுகவினரைக் காப்பாற்றும் போக்கிலேயேவிசாரணையை நடத்தினர்.
இதை எதிர்த்து கொல்லப்பட்ட மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து காவல்துறை கடும்கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம் இந்த விசாரணையை தர்மபுரி நீதிமன்றத்தில் இருந்து சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குமாற்றியது.
மேலும் அரசு வழக்கறிஞரையும் உயர் நீதிமன்றம் மாற்றியது. ஆனால், அந்த வழக்கறிஞருக்கு உரிய ஆவணங்களைத் தராமல்போலீசாரும் அரசும் இழுத்தடித்தன. ஆனாலும் ஒரு வழியாக விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
சேலம் 2வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நீதிபதி கிருஷ்ணராஜா பணிக்கு வரவில்லை. உடல் நலம் சரியில்லாத காரணத்தால்அவர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பின்னர் வழக்கை திங்கள்கிழமைக்கு நீதிபதி கிருஷ்ணராஜாஒத்திவைத்தார். திங்கள்கிழமை முதல் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து முடங்கிக் கிடந்த இந்த வழக்கு மீண்டும் சுறுசுறுப்படைந்து விரைவில் தீர்ப்பு வெளியாகும், தவறு செய்தவர்கள்தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மூன்று உயிர்களைப் பலி கொடுத்தவர்களின் குடும்பத்தினர் காத்துக்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications