போலிகள்: அமைச்சர், எம்எல்ஏ, அதிமுகவினர் மீது வழக்கு மழை-திமுகவினரும் சிக்கினர்
சென்னை:
13 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுகவினர் மீது ஆங்காங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. சில திமுகவினர் மீதும் வழக்குகள் போடப்பட்டுகின்றன.
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பாண்டுரங்கன் ஆகியோர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன.தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக மனு அளித்தவர்கள் மீது தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போலி வாக்காளர்களைச் சேர்த்தது பெரும்பாலும் அதிமுகவினரே என்பதால் இந்த வழக்கு நடவடிக்கைக்குத் தடை கோரிஅதிமுக தேர்தல் குழுத் தலைவரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவைநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதைத் தொடர்ந்து போலி வாக்காளர்களைச் சேர்க்க ஒட்டுமொத்தமாக மனு அளித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட குற்றவியல்நீதிமன்றங்களில் வழக்குத் தொடருமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முறையாக வழக்குகள் பதிவாகின்றனவா என்பதைக் கண்காணிக்க மத்திய துணைத் தேர்தல் ஆணையர் அனந்த்குமார்டெல்லியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதையடுத்து போலி மனுக்களை அளித்தவர்கள் மீது அந்தந்த பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில்வழக்கு தொடருமாறு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் போலி வாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள்பட்டியலிடப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலி வாக்காளர்களைச் சேர்த்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருப்பூர் தொகுதியில் போலிவாக்காளர்களைச் சேர்த்த அதிமுக எம்எல்ஏ சிவசாமி ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் பகுதியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களைச் சேர்க்க மனுகொடுத்ததாக அதிமுக மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது ஜெயம்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.மணி 6,000 போலி வாக்காளர்களை சேர்க்க மனு கொடுத்திருந்தார். அவர்மீது பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது. இங்கு போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுக அமைப்புச்செயலாளர் சுலோசனா சம்பத் மீதும் வழக்கு பாய்கிறது.
கடலூர் மாவட்டத்தில், மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதி வாரியத் தலைவருமான அருண்மொழித் தேவன் மீதுவழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் 5,300 போலிகளை சேர்த்த அதிமுக பிரமுகர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.
சேலத்தில் 25,000 போலிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை சேர்த்த அதிமுகவினர் மீது வழக்குப் போடப்படவுள்ளது.
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் அனந்த கிருஷ்ணன் மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் போலி வாக்காளர்களைச் சேர்த்த அமைச்சர் பாண்டுரங்கன், அதிமுக எம்எல்ஏ நீலகண்டன் ஆகியோர்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருத்தணியில் போலி வாக்காளர்களைச் சேர்த்த அமைச்சர் சோமசுந்தரம் மீதும், அதே போல திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்பரஞ்ஜோதி மீதும் வழக்குப் போடப்படும் என்று தெரிகிறது.
திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியம் 248 போலி வாக்காளர்களை சேர்க்க முயன்றதால் அவர் மீதும் அரியலூர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்படுகிறது. தூத்துக்குடியில் போலி வாக்காளர்களைச் சேர்த்த திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி மீதும்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மீது அதிக அளவில் வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில் இதில் மேலும் பல அமைச்சர்களும்சிக்குவார்கள் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications