சிறையில் பரவும் எய்ட்ஸ்: 4 கைதிகள் பலி
கோவை:
கோவை சிறையில் கடந்த 20 நாட்களில் எய்ட்ஸ் நோய்க்கு 4 கைதிகள் பலியாகியுள்ளனர். சிறையில் இன்னும் 66 கைதிகள்எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறையில் 2,700 கைதிகள் உள்ளனர். இதில் 1,400 பேர் தண்டனைக் கைதிகள், 1,100 பேர் விசாரணை கைதிகள்,சமீபகாலமாக கைதிகள் அடுத்தடுத்து எய்ட்ஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர்.கடந்த 20 நாட்களில் மட்டும் கோவை இந்திரா நகரைச் சேர்ந்த நாகரத்தினம்(வயது 30), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தராஜேந்திரன் (வயது 32), பவானியைச் சேர்ந்த பழனி (வயது 35) மற்றும் வரதன் (வயது 40) ஆகியோர் இறந்துள்ளனர். இவர்கள்அனைவரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் போது கைதிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் எய்ட்ஸ்சோதனை செய்யப்படுவதில்லை. இதனால் சிறைக்கு வந்தபின் கைதிக்கு எயட்ஸ் தாக்கியதா? அல்லது சிறைக்கு வரும் முன்பேஎய்ட்ஸ் இருந்ததா? என்பது புரியாத புதிராக உள்ளது.
கைதிகளில் பலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதால் இந்த நோய் பரவி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் 66கைதிகளுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தகவல் பரவியுள்ளதால் சிறைக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகரத்தினம் என்ற கைதி எய்ட்ஸால் இறந்துவிட்டதாக கருதப்பட்டாலும் இதை அவரது தம்பி நாகமணி (வயது 27)மறுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறிய போது, திருட்டு வழக்கு தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் என் அண்ணனை தேடிய போது அவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டார். பிறகு சென்னை சிறையிலேயே அடைக்ப்பட்டுவிட்டார்.
அவரை கோவை சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். நாகரத்தினம் திடகாத்திரமானவர். அவரை தீபாவளி நாளன்று சிறையில்சென்று பார்த்தேன் நன்றாகத் தான் இருந்தார். அதற்குள் எய்ட்ஸ் வந்து இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதில் ஏதோ மர்மம்இருக்கிறது எள்றார்.
இது குறித்து கோவை சிறைத்துறை டிஐஜி கூறுகையில், கோவை சிறையில் எய்ட்ஸ் பரவ வாய்ப்பு இல்லை. சில கைதிகள் உள்ளேவரும் போதே எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வந்த பிறகு சில மாதங்களில் பலியாகி விடுகின்றனர். இதற்குநாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications