தமிழகத்தை மாற்றி காட்டுவேன்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

வரும் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்கூறினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் பொதுக் கூட்டம் விழுப்புரம் நகராட்சி விளையாட்டு அரங்கில் நடந்தது. கூட்டத்தில்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:

4 பேருக்கு 3 சக்கர சைக்கிள் தந்து விட்டு நாற்காலிக்கு ஆசையா என்று கேட்கின்றனர். என்னை விமர்சனம் செய்பவர்கள் மக்களைசந்திப்பது இல்லை. தேர்தல் வரும்போது தான் மாமா, மாப்பிள்ளை என்று வீடு தேடிவந்து பேசுவார்கள்.

மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். இதே கேள்வியை இன்னும் 5 மாதங்களில்மக்கள் உங்களை பார்த்து கேட்டால் என்ன சொல்வீர்கள், நடிகர் என்ன செய்ய முடியும் என்பீர்கள். அவர்கள், எம்ஜிஆர்முதல்வராக ஆட்சியை பிடித்ததை மறந்து விட்டு பேசுகின்றனர்.

தமிழகத்தில் இப்போது 70 கட்சிகள் உள்ளன. என்னுடையவது 71வது கட்சி என்கின்றனர். நான் ஒப்புக்கொள்கிறேன். 71ல் உள்ள7 எடுத்துவிட்டால் எங்களுடையது 1வது கட்சி. மற்ற கட்சிகளை பார்த்து நான் கேட்கிறேன் அவர்களுக்கு தைரியம் இருந்தால்தேர்தலில் தனித்தனியாக நிற்க சொல்லுங்கள். அதற்கு பிறகு கூட்டணி வையுங்கள்.

மற்றவர் முதுகில் சவாரி செய்து கொண்டு எங்களுக்கு யானை பலம், குதிரை பலம் என்கின்றனர். ஜெயலலிதா பதவி விலகவேண்டும் என்கின்றனர். ஏன் பதவி விலக வேண்டும் பதவி விலகினால் இறந்தவர்களின் உயிர் வந்துவிடுமா? நான் எந்தகட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. (அப்படியா) மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுகிறேன்.

ஊழல், லஞ்சம் என்ற நிலையை நான் அடக்குவேன். என்னை வளர விட மாட்டார்கள். அதற்காக எதையாவது செய்வார்கள். நான்அதை பற்றி கவலைப்படவில்லை. எந்த இன்னலையும் சந்திப்பேன். 2 பக்கமும் மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். இந்த முறைஎங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று பேசினார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+