ஏ.சி.சண்முகம் குடும்பத்துக்கு முன் ஜாமீன்
சென்னை:
வெள்ளத்தில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காத வழக்கில், எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகவேந்தர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரவாயல் பகுதியில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சிலவாரங்களுக்கு முன்பு இங்கு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கல்லூரி விடுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சிக்கி400 மாணவர்கள் பரிதவித்தனர். அவர்களை பத்திரமாக மீட்க ஏ.சி.சண்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில், ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி,மகன், மைத்துனர் (அனைவரும்பல்கலைக்கழகத்தில் ஆளுக்கொரு பொறுப்பில் உள்ளனர்) மற்றும் இயக்குநர் சீனிவாச கோபாலன் ஆகியோர் மீது புகார்கூறப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் அனைவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்குமாறு கோரி அனைவரது சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், தலா ரூ. 5000 ரொக்கம், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்கி முன்ஜாமீன் பெறலாம். 15 நாட்களுக்குள் அனைவரும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீனைப்பெறலாம் என உத்தரவிட்டார்.
இதேபோல கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கேட்ட கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கிலும்முன் ஜாமீன் கோரியிருந்தார் ஏ.சி.சண்முகம். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட மாணவருக்கு அவரதுகல்விக் கட்டணத்தைக் கொடுத்து விட்டோம் என ஏ.சி.எஸ்.ஸின் வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து அந்த வழக்கிலும்அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி உசேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications