பாஜக தலைவராகிறார் ராஜ்நாத் சிங்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Rajnath Singh பாரதிய ஜனதாவின் புதிய தலைவராக உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கானமுறையான அறிவிப்பு மும்பையில் நடைபெற உள்ள பாஜக மாநாட்டில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலகுவதை தொடர்ந்து அந்த பதவிக்கு ராஜ்நாத் சிங் சுஷ்மா சுவராஜ் உள்பட பலர்பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜகவின் உயர் மட்ட குழு கூட்டம் கூடி விவாதித்தது. இதில் ராஜ்நாத் சிங்பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ராஜ்நாத் சிங், வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு மட்டும் இல்லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடமும் நெருங்கிய தொடர்புவைத்து உள்ளவர். இவரது பெயரை சங்பரிவார் அமைப்புகளுக்கு பாஜக தலைவர்கள் சிபாரிசு செய்து உள்ளார்கள்.

இது பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன், பொதுச்செயலாளர் மோகன் பகவத் ஆகியோருடன் வெங்கையா நாயடு, அருண்ஜெட்லி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். ராஜ்நாத் சிங் தேர்வுக்கு பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகதெரிகிறது. எனவே வரும் 31ம் தேதி ராஜ்நாத் சிங் தலைவராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்க உள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத் சிங் பாஜகவின் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியினை மறுத்துள்ளார்.

இன்னும் ஆலோசனை விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. யாருடைய பெயரும் இன்னும் முடிவாகவில்லை என்றுசென்னையில் செய்தியாளர்களிடம் நாயுடு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+